குர்ஆனின் 69-வது சூரா

சூரா Al-Haqqah

மக்கீ 52 வசனங்கள் Juz 29
Al-Haqqah

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

ٱلْحَآقَّةُ ﴿١﴾

நிச்சயமானது.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

مَا ٱلْحَآقَّةُ ﴿٢﴾

நிச்சயமானது எது?

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحَآقَّةُ ﴿٣﴾

அன்றியும் நிச்சயமானது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌۢ بِٱلْقَارِعَةِ ﴿٤﴾

ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا۟ بِٱلطَّاغِيَةِ ﴿٥﴾

எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَأَمَّا عَادٌۭ فَأُهْلِكُوا۟ بِرِيحٍۢ صَرْصَرٍ عَاتِيَةٍۢ ﴿٦﴾

இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍۢ وَثَمَٰنِيَةَ أَيَّامٍ حُسُومًۭا فَتَرَى ٱلْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍۢ ﴿٧﴾

அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான், எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فَهَلْ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٍۢ ﴿٨﴾

ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா?

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَجَآءَ فِرْعَوْنُ وَمَن قَبْلَهُۥ وَٱلْمُؤْتَفِكَٰتُ بِٱلْخَاطِئَةِ ﴿٩﴾

அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فَعَصَوْا۟ رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةًۭ رَّابِيَةً ﴿١٠﴾

அதனால், அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர், ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

إِنَّا لَمَّا طَغَا ٱلْمَآءُ حَمَلْنَٰكُمْ فِى ٱلْجَارِيَةِ ﴿١١﴾

தண்ணீர் பொங்கிய போது நிச்சயமாக நாம் உங்களைக் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)னோம்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةًۭ وَتَعِيَهَآ أُذُنٌۭ وَٰعِيَةٌۭ ﴿١٢﴾

அதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படிப்பினையாக்குவதற்கும், பேணிக்காக்கும் செவி (அதை நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப் பேணிக்கொள்வதற்கும் (ஆக அவ்வாறு செய்தோம்).

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فَإِذَا نُفِخَ فِى ٱلصُّورِ نَفْخَةٌۭ وَٰحِدَةٌۭ ﴿١٣﴾

எனவே, ஸூரில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது:

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَحُمِلَتِ ٱلْأَرْضُ وَٱلْجِبَالُ فَدُكَّتَا دَكَّةًۭ وَٰحِدَةًۭ ﴿١٤﴾

இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் -

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فَيَوْمَئِذٍۢ وَقَعَتِ ٱلْوَاقِعَةُ ﴿١٥﴾

அந்த நாளில் தாம் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِىَ يَوْمَئِذٍۢ وَاهِيَةٌۭ ﴿١٦﴾

வானமும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَٱلْمَلَكُ عَلَىٰٓ أَرْجَآئِهَا ۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍۢ ثَمَٰنِيَةٌۭ ﴿١٧﴾

இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள், அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

يَوْمَئِذٍۢ تُعْرَضُونَ لَا تَخْفَىٰ مِنكُمْ خَافِيَةٌۭ ﴿١٨﴾

(மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقْرَءُوا۟ كِتَٰبِيَهْ ﴿١٩﴾

ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), "இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்" எனக் கூறுவார்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

إِنِّى ظَنَنتُ أَنِّى مُلَٰقٍ حِسَابِيَهْ ﴿٢٠﴾

"நிச்சயமாக, நாம் உன்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்."

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فَهُوَ فِى عِيشَةٍۢ رَّاضِيَةٍۢ ﴿٢١﴾

ஆகவே, அவர் திருப்தியான சுக வாழ்க்கையில் -

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فِى جَنَّةٍ عَالِيَةٍۢ ﴿٢٢﴾

உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

قُطُوفُهَا دَانِيَةٌۭ ﴿٢٣﴾

அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திருக்கும்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَآ أَسْلَفْتُمْ فِى ٱلْأَيَّامِ ٱلْخَالِيَةِ ﴿٢٤﴾

"சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்" (என அவர்களுக்குக் கூறப்படும்).

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَٰلَيْتَنِى لَمْ أُوتَ كِتَٰبِيَهْ ﴿٢٥﴾

ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்; "என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ ﴿٢٦﴾

"அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

يَٰلَيْتَهَا كَانَتِ ٱلْقَاضِيَةَ ﴿٢٧﴾

"(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

مَآ أَغْنَىٰ عَنِّى مَالِيَهْ ۜ ﴿٢٨﴾

"என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

هَلَكَ عَنِّى سُلْطَٰنِيَهْ ﴿٢٩﴾

"என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!" (என்று அரற்றுவான்).

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

خُذُوهُ فَغُلُّوهُ ﴿٣٠﴾

"(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்."

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

ثُمَّ ٱلْجَحِيمَ صَلُّوهُ ﴿٣١﴾

"பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

ثُمَّ فِى سِلْسِلَةٍۢ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًۭا فَٱسْلُكُوهُ ﴿٣٢﴾

"பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்" (என்று உத்தரவிடப்படும்).

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

إِنَّهُۥ كَانَ لَا يُؤْمِنُ بِٱللَّهِ ٱلْعَظِيمِ ﴿٣٣﴾

"நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்."

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ ﴿٣٤﴾

"அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை."

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فَلَيْسَ لَهُ ٱلْيَوْمَ هَٰهُنَا حَمِيمٌۭ ﴿٣٥﴾

"எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை."

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍۢ ﴿٣٦﴾

"சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை."

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

لَّا يَأْكُلُهُۥٓ إِلَّا ٱلْخَٰطِـُٔونَ ﴿٣٧﴾

"குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்."

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فَلَآ أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ ﴿٣٨﴾

ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம் செய்கிறேன்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَمَا لَا تُبْصِرُونَ ﴿٣٩﴾

நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (சத்தியம் செய்கிறேன்.)

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍۢ كَرِيمٍۢ ﴿٤٠﴾

நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍۢ ۚ قَلِيلًۭا مَّا تُؤْمِنُونَ ﴿٤١﴾

இது ஒரு கவிஞனின் சொல்லன்று (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَلَا بِقَوْلِ كَاهِنٍۢ ۚ قَلِيلًۭا مَّا تَذَكَّرُونَ ﴿٤٢﴾

(இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைந்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

تَنزِيلٌۭ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَ ﴿٤٣﴾

அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ ٱلْأَقَاوِيلِ ﴿٤٤﴾

அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

لَأَخَذْنَا مِنْهُ بِٱلْيَمِينِ ﴿٤٥﴾

அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு-

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ ٱلْوَتِينَ ﴿٤٦﴾

பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَٰجِزِينَ ﴿٤٧﴾

அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَإِنَّهُۥ لَتَذْكِرَةٌۭ لِّلْمُتَّقِينَ ﴿٤٨﴾

ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ ﴿٤٩﴾

ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَإِنَّهُۥ لَحَسْرَةٌ عَلَى ٱلْكَٰفِرِينَ ﴿٥٠﴾

அன்றியும், நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَإِنَّهُۥ لَحَقُّ ٱلْيَقِينِ ﴿٥١﴾

மேலும், அது நிச்சயமாக உறுதியான உண்மையாகும்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ ﴿٥٢﴾

ஆகவே, மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

Al-Haqqah வசனம் 1 / 52

அரபி வாசகம்: உஸ்மானி எழுத்து. ஆங்கில மொழிபெயர்ப்பு: Jan Turst Foundation. ஒலிப்பதிவு: everyayah.com.

சூரா Al-Haqqah பற்றி

சூரா Al-Haqqah (الحاقة) குர்ஆனின் 69-வது சூரா. இதில் 52 வசனங்கள் உள்ளன; இது Juz 29-ல் உள்ளது. இது மக்கீ சூரா என வகைப்படுத்தப்படுகிறது; அதாவது நபியவர்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்வதற்கு (ஹிஜ்ரத்) முன்பாகவே பெரும்பாலும் அருளப்பட்டது.

இதன் பெயர் الحاقة; அரபியில் இந்த சூரா இவ்வாறே அறியப்படுகிறது.

சூரா Al-Haqqah பற்றிய கேள்விகள்

சூரா Al-Haqqah-ல் எத்தனை வசனங்கள் உள்ளன?

சூரா Al-Haqqah-ல் 52 வசனங்கள் உள்ளன.

சூரா Al-Haqqah மக்கீயா, மதனீயா?

இது மக்கீ சூரா என வகைப்படுத்தப்படுகிறது.

சூரா Al-Haqqah எந்த Juz-ல் உள்ளது?

சூரா Al-Haqqah Juz 29-ல் உள்ளது.

சூரா Al-Haqqah-ஐ எங்கு கேட்கலாம்?

அப்துர் ரஹ்மான் அஸ்-ஸுதைஸ், மிஷாரி அல்அஃபாசீ, மஹ்மூத் கலீல் அல்ஹுசரி, அப்துல் பாஸித் அப்துஸ் ஸமத், மாஹிர் அல்முஐக்லி, ஸஅத் அல்ஃகாமிதீ, அஹ்மத் அல்அஜ்மீ, அபூபக்ர் அஷ்-ஷாத்ரீ, ஹானீ அர்-ரிஃபாஈ, முஹம்மத் சித்தீக் அல்மின்ஷாவீ, அலீ அல்ஹுதைஃபீ, முஹம்மத் அய்யூப், அப்துல்லாஹ் பஸ்ஃபர், யாஸிர் அத்-தவ்ஸரீ, நாஸிர் அல்கத்தாமீ, ஸலாஹ் அல்புதைர், ஸஊத் அஷ்-ஷுரைம், அப்துல்லாஹ் அவ்வாத் அல்ஜுஹனீ, முஹம்மத் ஜிப்ரீல் ஓதியதை வசனம் வசனமாகக் கேட்க இந்தப் பக்கத்தில் இயக்கு என்பதை அழுத்துங்கள்.

This page is translated with machine assistance and may contain mistakes. The English and Arabic versions are our reference. About our sources