உண்மையாளர்
அல்லாஹ் இத்ரீஸை உண்மையாளர், நபி என்று கூறுகிறான்; அவரை உயர்ந்த தரத்துக்கு உயர்த்தியதாகவும், பொறுமையாளர்களிலும் நல்லவர்களிலும் ஒருவராக எண்ணுவதாகவும் கூறுகிறான்.
வசனங்களைக் காட்டு (4)
وَٱذْكُرْ فِى ٱلْكِتَٰبِ إِدْرِيسَ ۚ إِنَّهُۥ كَانَ صِدِّيقًۭا نَّبِيًّۭا ﴿٥٦﴾
(நபியே!) இவ்வேதத்தில் இத்ரீஸைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் ஸித்தீக்காக (மிக்க சத்தியவானாக) நபியாக இருந்தார்.
وَرَفَعْنَٰهُ مَكَانًا عَلِيًّا ﴿٥٧﴾
மேலும், நாம் அவரை ஓர் உயரிய இடத்தில் உயர்த்தினோம்.
وَإِسْمَٰعِيلَ وَإِدْرِيسَ وَذَا ٱلْكِفْلِ ۖ كُلٌّۭ مِّنَ ٱلصَّٰبِرِينَ ﴿٨٥﴾
இன்னும்; இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக) அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே!
وَأَدْخَلْنَٰهُمْ فِى رَحْمَتِنَآ ۖ إِنَّهُم مِّنَ ٱلصَّٰلِحِينَ ﴿٨٦﴾
இவர்கள் (எல்லோரையும்) நாம் நம் கிருபையில் புகுத்திக் கொண்டோம், நிச்சயமாக இவர்கள் (ஸாலிஹீன்களான) நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்களே!