குர்ஆனின் 88-வது சூரா

சூரா Al-Ghashiyah

மக்கீ 26 வசனங்கள் Juz 30
Al-Ghashiyah

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَٰشِيَةِ ﴿١﴾

சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وُجُوهٌۭ يَوْمَئِذٍ خَٰشِعَةٌ ﴿٢﴾

அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

عَامِلَةٌۭ نَّاصِبَةٌۭ ﴿٣﴾

அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

تَصْلَىٰ نَارًا حَامِيَةًۭ ﴿٤﴾

கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍۢ ﴿٥﴾

கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍۢ ﴿٦﴾

அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍۢ ﴿٧﴾

அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ نَّاعِمَةٌۭ ﴿٨﴾

அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

لِّسَعْيِهَا رَاضِيَةٌۭ ﴿٩﴾

தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فِى جَنَّةٍ عَالِيَةٍۢ ﴿١٠﴾

உன்னதமான சுவர்க்கச் சோலையில்-

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

لَّا تَسْمَعُ فِيهَا لَٰغِيَةًۭ ﴿١١﴾

அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فِيهَا عَيْنٌۭ جَارِيَةٌۭ ﴿١٢﴾

அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فِيهَا سُرُرٌۭ مَّرْفُوعَةٌۭ ﴿١٣﴾

அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَأَكْوَابٌۭ مَّوْضُوعَةٌۭ ﴿١٤﴾

(அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَنَمَارِقُ مَصْفُوفَةٌۭ ﴿١٥﴾

மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ ﴿١٦﴾

விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ ﴿١٧﴾

(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ ﴿١٨﴾

மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ ﴿١٩﴾

இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ ﴿٢٠﴾

இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌۭ ﴿٢١﴾

ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ ﴿٢٢﴾

அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ ﴿٢٣﴾

ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ ﴿٢٤﴾

அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ ﴿٢٥﴾

நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم ﴿٢٦﴾

பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

Al-Ghashiyah வசனம் 1 / 26

அரபி வாசகம்: உஸ்மானி எழுத்து. ஆங்கில மொழிபெயர்ப்பு: Jan Turst Foundation. ஒலிப்பதிவு: everyayah.com.

சூரா Al-Ghashiyah பற்றி

சூரா Al-Ghashiyah (الغاشية) குர்ஆனின் 88-வது சூரா. இதில் 26 வசனங்கள் உள்ளன; இது Juz 30-ல் உள்ளது. இது மக்கீ சூரா என வகைப்படுத்தப்படுகிறது; அதாவது நபியவர்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்வதற்கு (ஹிஜ்ரத்) முன்பாகவே பெரும்பாலும் அருளப்பட்டது.

இதன் பெயர் الغاشية; அரபியில் இந்த சூரா இவ்வாறே அறியப்படுகிறது.

சூரா Al-Ghashiyah பற்றிய கேள்விகள்

சூரா Al-Ghashiyah-ல் எத்தனை வசனங்கள் உள்ளன?

சூரா Al-Ghashiyah-ல் 26 வசனங்கள் உள்ளன.

சூரா Al-Ghashiyah மக்கீயா, மதனீயா?

இது மக்கீ சூரா என வகைப்படுத்தப்படுகிறது.

சூரா Al-Ghashiyah எந்த Juz-ல் உள்ளது?

சூரா Al-Ghashiyah Juz 30-ல் உள்ளது.

சூரா Al-Ghashiyah-ஐ எங்கு கேட்கலாம்?

அப்துர் ரஹ்மான் அஸ்-ஸுதைஸ், மிஷாரி அல்அஃபாசீ, மஹ்மூத் கலீல் அல்ஹுசரி, அப்துல் பாஸித் அப்துஸ் ஸமத், மாஹிர் அல்முஐக்லி, ஸஅத் அல்ஃகாமிதீ, அஹ்மத் அல்அஜ்மீ, அபூபக்ர் அஷ்-ஷாத்ரீ, ஹானீ அர்-ரிஃபாஈ, முஹம்மத் சித்தீக் அல்மின்ஷாவீ, அலீ அல்ஹுதைஃபீ, முஹம்மத் அய்யூப், அப்துல்லாஹ் பஸ்ஃபர், யாஸிர் அத்-தவ்ஸரீ, நாஸிர் அல்கத்தாமீ, ஸலாஹ் அல்புதைர், ஸஊத் அஷ்-ஷுரைம், அப்துல்லாஹ் அவ்வாத் அல்ஜுஹனீ, முஹம்மத் ஜிப்ரீல் ஓதியதை வசனம் வசனமாகக் கேட்க இந்தப் பக்கத்தில் இயக்கு என்பதை அழுத்துங்கள்.

This page is translated with machine assistance and may contain mistakes. The English and Arabic versions are our reference. About our sources