குர்ஆனின் 87-வது சூரா

சூரா Al-A'la

மக்கீ 19 வசனங்கள் Juz 30
Al-A'la

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَى ﴿١﴾

(நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰ ﴿٢﴾

அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَٱلَّذِى قَدَّرَ فَهَدَىٰ ﴿٣﴾

மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَٱلَّذِىٓ أَخْرَجَ ٱلْمَرْعَىٰ ﴿٤﴾

அன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فَجَعَلَهُۥ غُثَآءً أَحْوَىٰ ﴿٥﴾

பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰٓ ﴿٦﴾

(நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ يَعْلَمُ ٱلْجَهْرَ وَمَا يَخْفَىٰ ﴿٧﴾

அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ ﴿٨﴾

அன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فَذَكِّرْ إِن نَّفَعَتِ ٱلذِّكْرَىٰ ﴿٩﴾

ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ ﴿١٠﴾

(அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَيَتَجَنَّبُهَا ٱلْأَشْقَى ﴿١١﴾

ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

ٱلَّذِى يَصْلَى ٱلنَّارَ ٱلْكُبْرَىٰ ﴿١٢﴾

அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ ﴿١٣﴾

பின்னர், அதில் அவன் மரிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ ﴿١٤﴾

தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَذَكَرَ ٱسْمَ رَبِّهِۦ فَصَلَّىٰ ﴿١٥﴾

மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

بَلْ تُؤْثِرُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا ﴿١٦﴾

எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَٱلْءَاخِرَةُ خَيْرٌۭ وَأَبْقَىٰٓ ﴿١٧﴾

ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

إِنَّ هَٰذَا لَفِى ٱلصُّحُفِ ٱلْأُولَىٰ ﴿١٨﴾

நிச்யசமாக இது முந்திய ஆகமங்களிலும்-

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

صُحُفِ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰ ﴿١٩﴾

இப்றாஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

Al-A'la வசனம் 1 / 19

அரபி வாசகம்: உஸ்மானி எழுத்து. ஆங்கில மொழிபெயர்ப்பு: Jan Turst Foundation. ஒலிப்பதிவு: everyayah.com.

சூரா Al-A'la பற்றி

சூரா Al-A'la (الأعلى) குர்ஆனின் 87-வது சூரா. இதில் 19 வசனங்கள் உள்ளன; இது Juz 30-ல் உள்ளது. இது மக்கீ சூரா என வகைப்படுத்தப்படுகிறது; அதாவது நபியவர்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்வதற்கு (ஹிஜ்ரத்) முன்பாகவே பெரும்பாலும் அருளப்பட்டது.

இதன் பெயர் الأعلى; அரபியில் இந்த சூரா இவ்வாறே அறியப்படுகிறது.

சூரா Al-A'la பற்றிய கேள்விகள்

சூரா Al-A'la-ல் எத்தனை வசனங்கள் உள்ளன?

சூரா Al-A'la-ல் 19 வசனங்கள் உள்ளன.

சூரா Al-A'la மக்கீயா, மதனீயா?

இது மக்கீ சூரா என வகைப்படுத்தப்படுகிறது.

சூரா Al-A'la எந்த Juz-ல் உள்ளது?

சூரா Al-A'la Juz 30-ல் உள்ளது.

சூரா Al-A'la-ஐ எங்கு கேட்கலாம்?

அப்துர் ரஹ்மான் அஸ்-ஸுதைஸ், மிஷாரி அல்அஃபாசீ, மஹ்மூத் கலீல் அல்ஹுசரி, அப்துல் பாஸித் அப்துஸ் ஸமத், மாஹிர் அல்முஐக்லி, ஸஅத் அல்ஃகாமிதீ, அஹ்மத் அல்அஜ்மீ, அபூபக்ர் அஷ்-ஷாத்ரீ, ஹானீ அர்-ரிஃபாஈ, முஹம்மத் சித்தீக் அல்மின்ஷாவீ, அலீ அல்ஹுதைஃபீ, முஹம்மத் அய்யூப், அப்துல்லாஹ் பஸ்ஃபர், யாஸிர் அத்-தவ்ஸரீ, நாஸிர் அல்கத்தாமீ, ஸலாஹ் அல்புதைர், ஸஊத் அஷ்-ஷுரைம், அப்துல்லாஹ் அவ்வாத் அல்ஜுஹனீ, முஹம்மத் ஜிப்ரீல் ஓதியதை வசனம் வசனமாகக் கேட்க இந்தப் பக்கத்தில் இயக்கு என்பதை அழுத்துங்கள்.

This page is translated with machine assistance and may contain mistakes. The English and Arabic versions are our reference. About our sources