ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ ﴿١﴾
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
குர்ஆனின் 96-வது சூரா
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ ﴿١﴾
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
خَلَقَ ٱلْإِنسَٰنَ مِنْ عَلَقٍ ﴿٢﴾
'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ ﴿٣﴾
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ ﴿٤﴾
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
عَلَّمَ ٱلْإِنسَٰنَ مَا لَمْ يَعْلَمْ ﴿٥﴾
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
كَلَّآ إِنَّ ٱلْإِنسَٰنَ لَيَطْغَىٰٓ ﴿٦﴾
எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
أَن رَّءَاهُ ٱسْتَغْنَىٰٓ ﴿٧﴾
அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجْعَىٰٓ ﴿٨﴾
நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
أَرَءَيْتَ ٱلَّذِى يَنْهَىٰ ﴿٩﴾
தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?
عَبْدًا إِذَا صَلَّىٰٓ ﴿١٠﴾
ஓர் அடியாரை - அவர் தொழும்போது,
أَرَءَيْتَ إِن كَانَ عَلَى ٱلْهُدَىٰٓ ﴿١١﴾
நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
أَوْ أَمَرَ بِٱلتَّقْوَىٰٓ ﴿١٢﴾
அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
أَرَءَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ ﴿١٣﴾
அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,
أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ ﴿١٤﴾
நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًۢا بِٱلنَّاصِيَةِ ﴿١٥﴾
அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
نَاصِيَةٍۢ كَٰذِبَةٍ خَاطِئَةٍۢ ﴿١٦﴾
தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
فَلْيَدْعُ نَادِيَهُۥ ﴿١٧﴾
ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
سَنَدْعُ ٱلزَّبَانِيَةَ ﴿١٨﴾
நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
كَلَّا لَا تُطِعْهُ وَٱسْجُدْ وَٱقْتَرِب ۩ ﴿١٩﴾
(அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.
அரபி வாசகம்: உஸ்மானி எழுத்து. ஆங்கில மொழிபெயர்ப்பு: Jan Turst Foundation. ஒலிப்பதிவு: everyayah.com.
சூரா Al-'Alaq (العلق) குர்ஆனின் 96-வது சூரா. இதில் 19 வசனங்கள் உள்ளன; இது Juz 30-ல் உள்ளது. இது மக்கீ சூரா என வகைப்படுத்தப்படுகிறது; அதாவது நபியவர்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்வதற்கு (ஹிஜ்ரத்) முன்பாகவே பெரும்பாலும் அருளப்பட்டது.
இதன் பெயர் العلق; அரபியில் இந்த சூரா இவ்வாறே அறியப்படுகிறது.
சூரா Al-'Alaq-ல் 19 வசனங்கள் உள்ளன.
இது மக்கீ சூரா என வகைப்படுத்தப்படுகிறது.
சூரா Al-'Alaq Juz 30-ல் உள்ளது.
அப்துர் ரஹ்மான் அஸ்-ஸுதைஸ், மிஷாரி அல்அஃபாசீ, மஹ்மூத் கலீல் அல்ஹுசரி, அப்துல் பாஸித் அப்துஸ் ஸமத், மாஹிர் அல்முஐக்லி, ஸஅத் அல்ஃகாமிதீ, அஹ்மத் அல்அஜ்மீ, அபூபக்ர் அஷ்-ஷாத்ரீ, ஹானீ அர்-ரிஃபாஈ, முஹம்மத் சித்தீக் அல்மின்ஷாவீ, அலீ அல்ஹுதைஃபீ, முஹம்மத் அய்யூப், அப்துல்லாஹ் பஸ்ஃபர், யாஸிர் அத்-தவ்ஸரீ, நாஸிர் அல்கத்தாமீ, ஸலாஹ் அல்புதைர், ஸஊத் அஷ்-ஷுரைம், அப்துல்லாஹ் அவ்வாத் அல்ஜுஹனீ, முஹம்மத் ஜிப்ரீல் ஓதியதை வசனம் வசனமாகக் கேட்க இந்தப் பக்கத்தில் இயக்கு என்பதை அழுத்துங்கள்.
This page is translated with machine assistance and may contain mistakes. The English and Arabic versions are our reference. About our sources