لَآ أُقْسِمُ بِهَٰذَا ٱلْبَلَدِ ﴿١﴾
இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
குர்ஆனின் 90-வது சூரா
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
لَآ أُقْسِمُ بِهَٰذَا ٱلْبَلَدِ ﴿١﴾
இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
وَأَنتَ حِلٌّۢ بِهَٰذَا ٱلْبَلَدِ ﴿٢﴾
நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,
وَوَالِدٍۢ وَمَا وَلَدَ ﴿٣﴾
பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِى كَبَدٍ ﴿٤﴾
திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.
أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌۭ ﴿٥﴾
'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?
يَقُولُ أَهْلَكْتُ مَالًۭا لُّبَدًا ﴿٦﴾
"ஏராளமான பொருளை நான் அழித்தேன்" என்று அவன் கூறுகிறான்.
أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌ ﴿٧﴾
தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِ ﴿٨﴾
அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா?
وَلِسَانًۭا وَشَفَتَيْنِ ﴿٩﴾
மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?
وَهَدَيْنَٰهُ ٱلنَّجْدَيْنِ ﴿١٠﴾
அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.
فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ ﴿١١﴾
ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ ﴿١٢﴾
(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.
فَكُّ رَقَبَةٍ ﴿١٣﴾
(அது) ஓர் அடிமையை விடுவித்தல்-
أَوْ إِطْعَٰمٌۭ فِى يَوْمٍۢ ذِى مَسْغَبَةٍۢ ﴿١٤﴾
அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.
يَتِيمًۭا ذَا مَقْرَبَةٍ ﴿١٥﴾
உறவினனான ஓர் அநாதைக்கோ,
أَوْ مِسْكِينًۭا ذَا مَتْرَبَةٍۢ ﴿١٦﴾
அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).
ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِ ﴿١٧﴾
பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.
أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ ﴿١٨﴾
அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.
وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَٰتِنَا هُمْ أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ ﴿١٩﴾
ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.
عَلَيْهِمْ نَارٌۭ مُّؤْصَدَةٌۢ ﴿٢٠﴾
அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.
அரபி வாசகம்: உஸ்மானி எழுத்து. ஆங்கில மொழிபெயர்ப்பு: Jan Turst Foundation. ஒலிப்பதிவு: everyayah.com.
சூரா Al-Balad (البلد) குர்ஆனின் 90-வது சூரா. இதில் 20 வசனங்கள் உள்ளன; இது Juz 30-ல் உள்ளது. இது மக்கீ சூரா என வகைப்படுத்தப்படுகிறது; அதாவது நபியவர்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்வதற்கு (ஹிஜ்ரத்) முன்பாகவே பெரும்பாலும் அருளப்பட்டது.
இதன் பெயர் البلد; அரபியில் இந்த சூரா இவ்வாறே அறியப்படுகிறது.
சூரா Al-Balad-ல் 20 வசனங்கள் உள்ளன.
இது மக்கீ சூரா என வகைப்படுத்தப்படுகிறது.
சூரா Al-Balad Juz 30-ல் உள்ளது.
அப்துர் ரஹ்மான் அஸ்-ஸுதைஸ், மிஷாரி அல்அஃபாசீ, மஹ்மூத் கலீல் அல்ஹுசரி, அப்துல் பாஸித் அப்துஸ் ஸமத், மாஹிர் அல்முஐக்லி, ஸஅத் அல்ஃகாமிதீ, அஹ்மத் அல்அஜ்மீ, அபூபக்ர் அஷ்-ஷாத்ரீ, ஹானீ அர்-ரிஃபாஈ, முஹம்மத் சித்தீக் அல்மின்ஷாவீ, அலீ அல்ஹுதைஃபீ, முஹம்மத் அய்யூப், அப்துல்லாஹ் பஸ்ஃபர், யாஸிர் அத்-தவ்ஸரீ, நாஸிர் அல்கத்தாமீ, ஸலாஹ் அல்புதைர், ஸஊத் அஷ்-ஷுரைம், அப்துல்லாஹ் அவ்வாத் அல்ஜுஹனீ, முஹம்மத் ஜிப்ரீல் ஓதியதை வசனம் வசனமாகக் கேட்க இந்தப் பக்கத்தில் இயக்கு என்பதை அழுத்துங்கள்.
This page is translated with machine assistance and may contain mistakes. The English and Arabic versions are our reference. About our sources