أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ ﴿١﴾
(நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?
குர்ஆனின் 107-வது சூரா
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ ﴿١﴾
(நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?
فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَ ﴿٢﴾
பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ ﴿٣﴾
மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.
فَوَيْلٌۭ لِّلْمُصَلِّينَ ﴿٤﴾
இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.
ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ ﴿٥﴾
அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ ﴿٦﴾
அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.
وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَ ﴿٧﴾
மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.
அரபி வாசகம்: உஸ்மானி எழுத்து. ஆங்கில மொழிபெயர்ப்பு: Jan Turst Foundation. ஒலிப்பதிவு: everyayah.com.
சூரா Al-Ma'un (الماعون) குர்ஆனின் 107-வது சூரா. இதில் 7 வசனங்கள் உள்ளன; இது Juz 30-ல் உள்ளது. இது மக்கீ சூரா என வகைப்படுத்தப்படுகிறது; அதாவது நபியவர்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்வதற்கு (ஹிஜ்ரத்) முன்பாகவே பெரும்பாலும் அருளப்பட்டது.
இதன் பெயர் الماعون; அரபியில் இந்த சூரா இவ்வாறே அறியப்படுகிறது.
சூரா Al-Ma'un-ல் 7 வசனங்கள் உள்ளன.
இது மக்கீ சூரா என வகைப்படுத்தப்படுகிறது.
சூரா Al-Ma'un Juz 30-ல் உள்ளது.
அப்துர் ரஹ்மான் அஸ்-ஸுதைஸ், மிஷாரி அல்அஃபாசீ, மஹ்மூத் கலீல் அல்ஹுசரி, அப்துல் பாஸித் அப்துஸ் ஸமத், மாஹிர் அல்முஐக்லி, ஸஅத் அல்ஃகாமிதீ, அஹ்மத் அல்அஜ்மீ, அபூபக்ர் அஷ்-ஷாத்ரீ, ஹானீ அர்-ரிஃபாஈ, முஹம்மத் சித்தீக் அல்மின்ஷாவீ, அலீ அல்ஹுதைஃபீ, முஹம்மத் அய்யூப், அப்துல்லாஹ் பஸ்ஃபர், யாஸிர் அத்-தவ்ஸரீ, நாஸிர் அல்கத்தாமீ, ஸலாஹ் அல்புதைர், ஸஊத் அஷ்-ஷுரைம், அப்துல்லாஹ் அவ்வாத் அல்ஜுஹனீ, முஹம்மத் ஜிப்ரீல் ஓதியதை வசனம் வசனமாகக் கேட்க இந்தப் பக்கத்தில் இயக்கு என்பதை அழுத்துங்கள்.
This page is translated with machine assistance and may contain mistakes. The English and Arabic versions are our reference. About our sources