குர்ஆனின் 81-வது சூரா

சூரா At-Takwir

மக்கீ 29 வசனங்கள் Juz 30
At-Takwir

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ ﴿١﴾

சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ ﴿٢﴾

நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ ﴿٣﴾

மலைகள் பெயர்க்கப்படும் போது-

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ ﴿٤﴾

சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْ ﴿٥﴾

காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ ﴿٦﴾

கடல்கள் தீ மூட்டப்படும்போது-

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ ﴿٧﴾

உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ ﴿٨﴾

உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

بِأَىِّ ذَنۢبٍۢ قُتِلَتْ ﴿٩﴾

"எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று-

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْ ﴿١٠﴾

பட்டோலைகள் விரிக்கப்படும் போது-

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ ﴿١١﴾

வானம் அகற்றப்படும் போது-

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَإِذَا ٱلْجَحِيمُ سُعِّرَتْ ﴿١٢﴾

நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْ ﴿١٣﴾

சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

عَلِمَتْ نَفْسٌۭ مَّآ أَحْضَرَتْ ﴿١٤﴾

ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِ ﴿١٥﴾

எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

ٱلْجَوَارِ ٱلْكُنَّسِ ﴿١٦﴾

முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَ ﴿١٧﴾

பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَ ﴿١٨﴾

மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍۢ كَرِيمٍۢ ﴿١٩﴾

நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍۢ ﴿٢٠﴾

(அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

مُّطَاعٍۢ ثَمَّ أَمِينٍۢ ﴿٢١﴾

(வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍۢ ﴿٢٢﴾

மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَلَقَدْ رَءَاهُ بِٱلْأُفُقِ ٱلْمُبِينِ ﴿٢٣﴾

அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍۢ ﴿٢٤﴾

மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَٰنٍۢ رَّجِيمٍۢ ﴿٢٥﴾

அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فَأَيْنَ تَذْهَبُونَ ﴿٢٦﴾

எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

إِنْ هُوَ إِلَّا ذِكْرٌۭ لِّلْعَٰلَمِينَ ﴿٢٧﴾

இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ ﴿٢٨﴾

உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَٰلَمِينَ ﴿٢٩﴾

ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

At-Takwir வசனம் 1 / 29

அரபி வாசகம்: உஸ்மானி எழுத்து. ஆங்கில மொழிபெயர்ப்பு: Jan Turst Foundation. ஒலிப்பதிவு: everyayah.com.

சூரா At-Takwir பற்றி

சூரா At-Takwir (التكوير) குர்ஆனின் 81-வது சூரா. இதில் 29 வசனங்கள் உள்ளன; இது Juz 30-ல் உள்ளது. இது மக்கீ சூரா என வகைப்படுத்தப்படுகிறது; அதாவது நபியவர்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்வதற்கு (ஹிஜ்ரத்) முன்பாகவே பெரும்பாலும் அருளப்பட்டது.

இதன் பெயர் التكوير; அரபியில் இந்த சூரா இவ்வாறே அறியப்படுகிறது.

சூரா At-Takwir பற்றிய கேள்விகள்

சூரா At-Takwir-ல் எத்தனை வசனங்கள் உள்ளன?

சூரா At-Takwir-ல் 29 வசனங்கள் உள்ளன.

சூரா At-Takwir மக்கீயா, மதனீயா?

இது மக்கீ சூரா என வகைப்படுத்தப்படுகிறது.

சூரா At-Takwir எந்த Juz-ல் உள்ளது?

சூரா At-Takwir Juz 30-ல் உள்ளது.

சூரா At-Takwir-ஐ எங்கு கேட்கலாம்?

அப்துர் ரஹ்மான் அஸ்-ஸுதைஸ், மிஷாரி அல்அஃபாசீ, மஹ்மூத் கலீல் அல்ஹுசரி, அப்துல் பாஸித் அப்துஸ் ஸமத், மாஹிர் அல்முஐக்லி, ஸஅத் அல்ஃகாமிதீ, அஹ்மத் அல்அஜ்மீ, அபூபக்ர் அஷ்-ஷாத்ரீ, ஹானீ அர்-ரிஃபாஈ, முஹம்மத் சித்தீக் அல்மின்ஷாவீ, அலீ அல்ஹுதைஃபீ, முஹம்மத் அய்யூப், அப்துல்லாஹ் பஸ்ஃபர், யாஸிர் அத்-தவ்ஸரீ, நாஸிர் அல்கத்தாமீ, ஸலாஹ் அல்புதைர், ஸஊத் அஷ்-ஷுரைம், அப்துல்லாஹ் அவ்வாத் அல்ஜுஹனீ, முஹம்மத் ஜிப்ரீல் ஓதியதை வசனம் வசனமாகக் கேட்க இந்தப் பக்கத்தில் இயக்கு என்பதை அழுத்துங்கள்.

This page is translated with machine assistance and may contain mistakes. The English and Arabic versions are our reference. About our sources