குர்ஆனின் 86-வது சூரா

சூரா At-Tariq

மக்கீ 17 வசனங்கள் Juz 30
At-Tariq

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ ﴿١﴾

வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ ﴿٢﴾

தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ ﴿٣﴾

அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

إِن كُلُّ نَفْسٍۢ لَّمَّا عَلَيْهَا حَافِظٌۭ ﴿٤﴾

ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ مِمَّ خُلِقَ ﴿٥﴾

மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

خُلِقَ مِن مَّآءٍۢ دَافِقٍۢ ﴿٦﴾

குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ ﴿٧﴾

முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌۭ ﴿٨﴾

இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ ﴿٩﴾

இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فَمَا لَهُۥ مِن قُوَّةٍۢ وَلَا نَاصِرٍۢ ﴿١٠﴾

மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ ﴿١١﴾

(திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ ﴿١٢﴾

(தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

إِنَّهُۥ لَقَوْلٌۭ فَصْلٌۭ ﴿١٣﴾

நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَمَا هُوَ بِٱلْهَزْلِ ﴿١٤﴾

அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًۭا ﴿١٥﴾

நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَأَكِيدُ كَيْدًۭا ﴿١٦﴾

நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فَمَهِّلِ ٱلْكَٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢا ﴿١٧﴾

எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

At-Tariq வசனம் 1 / 17

அரபி வாசகம்: உஸ்மானி எழுத்து. ஆங்கில மொழிபெயர்ப்பு: Jan Turst Foundation. ஒலிப்பதிவு: everyayah.com.

சூரா At-Tariq பற்றி

சூரா At-Tariq (الطارق) குர்ஆனின் 86-வது சூரா. இதில் 17 வசனங்கள் உள்ளன; இது Juz 30-ல் உள்ளது. இது மக்கீ சூரா என வகைப்படுத்தப்படுகிறது; அதாவது நபியவர்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்வதற்கு (ஹிஜ்ரத்) முன்பாகவே பெரும்பாலும் அருளப்பட்டது.

இதன் பெயர் الطارق; அரபியில் இந்த சூரா இவ்வாறே அறியப்படுகிறது.

சூரா At-Tariq பற்றிய கேள்விகள்

சூரா At-Tariq-ல் எத்தனை வசனங்கள் உள்ளன?

சூரா At-Tariq-ல் 17 வசனங்கள் உள்ளன.

சூரா At-Tariq மக்கீயா, மதனீயா?

இது மக்கீ சூரா என வகைப்படுத்தப்படுகிறது.

சூரா At-Tariq எந்த Juz-ல் உள்ளது?

சூரா At-Tariq Juz 30-ல் உள்ளது.

சூரா At-Tariq-ஐ எங்கு கேட்கலாம்?

அப்துர் ரஹ்மான் அஸ்-ஸுதைஸ், மிஷாரி அல்அஃபாசீ, மஹ்மூத் கலீல் அல்ஹுசரி, அப்துல் பாஸித் அப்துஸ் ஸமத், மாஹிர் அல்முஐக்லி, ஸஅத் அல்ஃகாமிதீ, அஹ்மத் அல்அஜ்மீ, அபூபக்ர் அஷ்-ஷாத்ரீ, ஹானீ அர்-ரிஃபாஈ, முஹம்மத் சித்தீக் அல்மின்ஷாவீ, அலீ அல்ஹுதைஃபீ, முஹம்மத் அய்யூப், அப்துல்லாஹ் பஸ்ஃபர், யாஸிர் அத்-தவ்ஸரீ, நாஸிர் அல்கத்தாமீ, ஸலாஹ் அல்புதைர், ஸஊத் அஷ்-ஷுரைம், அப்துல்லாஹ் அவ்வாத் அல்ஜுஹனீ, முஹம்மத் ஜிப்ரீல் ஓதியதை வசனம் வசனமாகக் கேட்க இந்தப் பக்கத்தில் இயக்கு என்பதை அழுத்துங்கள்.

This page is translated with machine assistance and may contain mistakes. The English and Arabic versions are our reference. About our sources