குர்ஆனின் 85-வது சூரா

சூரா Al-Buruj

மக்கீ 22 வசனங்கள் Juz 30
Al-Buruj

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْبُرُوجِ ﴿١﴾

கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَٱلْيَوْمِ ٱلْمَوْعُودِ ﴿٢﴾

இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَشَاهِدٍۢ وَمَشْهُودٍۢ ﴿٣﴾

மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

قُتِلَ أَصْحَٰبُ ٱلْأُخْدُودِ ﴿٤﴾

(நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் கொல்லப்பட்டனர்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

ٱلنَّارِ ذَاتِ ٱلْوَقُودِ ﴿٥﴾

விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்).

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌۭ ﴿٦﴾

அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِٱلْمُؤْمِنِينَ شُهُودٌۭ ﴿٧﴾

முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَمَا نَقَمُوا۟ مِنْهُمْ إِلَّآ أَن يُؤْمِنُوا۟ بِٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ ﴿٨﴾

(யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ شَهِيدٌ ﴿٩﴾

வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது, எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

إِنَّ ٱلَّذِينَ فَتَنُوا۟ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ ثُمَّ لَمْ يَتُوبُوا۟ فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ ٱلْحَرِيقِ ﴿١٠﴾

நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ جَنَّٰتٌۭ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْكَبِيرُ ﴿١١﴾

ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ ﴿١٢﴾

நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

إِنَّهُۥ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ ﴿١٣﴾

நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்தற்குப் பின்னும்) மீள வைக்கிறான்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَهُوَ ٱلْغَفُورُ ٱلْوَدُودُ ﴿١٤﴾

அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

ذُو ٱلْعَرْشِ ٱلْمَجِيدُ ﴿١٥﴾

(அவனே) அர்ஷுக்குடையவன் பெருந்தன்மை மிக்கவன்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فَعَّالٌۭ لِّمَا يُرِيدُ ﴿١٦﴾

தான் விரும்பியவற்றைச் செய்கிறவன்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْجُنُودِ ﴿١٧﴾

(நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா,

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فِرْعَوْنَ وَثَمُودَ ﴿١٨﴾

ஃபிர்அவ்னுடையவும், ஸமூதுடையவும்,

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى تَكْذِيبٍۢ ﴿١٩﴾

எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطٌۢ ﴿٢٠﴾

ஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

بَلْ هُوَ قُرْءَانٌۭ مَّجِيدٌۭ ﴿٢١﴾

(நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فِى لَوْحٍۢ مَّحْفُوظٍۭ ﴿٢٢﴾

(எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

Al-Buruj வசனம் 1 / 22

அரபி வாசகம்: உஸ்மானி எழுத்து. ஆங்கில மொழிபெயர்ப்பு: Jan Turst Foundation. ஒலிப்பதிவு: everyayah.com.

சூரா Al-Buruj பற்றி

சூரா Al-Buruj (البروج) குர்ஆனின் 85-வது சூரா. இதில் 22 வசனங்கள் உள்ளன; இது Juz 30-ல் உள்ளது. இது மக்கீ சூரா என வகைப்படுத்தப்படுகிறது; அதாவது நபியவர்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்வதற்கு (ஹிஜ்ரத்) முன்பாகவே பெரும்பாலும் அருளப்பட்டது.

இதன் பெயர் البروج; அரபியில் இந்த சூரா இவ்வாறே அறியப்படுகிறது.

சூரா Al-Buruj பற்றிய கேள்விகள்

சூரா Al-Buruj-ல் எத்தனை வசனங்கள் உள்ளன?

சூரா Al-Buruj-ல் 22 வசனங்கள் உள்ளன.

சூரா Al-Buruj மக்கீயா, மதனீயா?

இது மக்கீ சூரா என வகைப்படுத்தப்படுகிறது.

சூரா Al-Buruj எந்த Juz-ல் உள்ளது?

சூரா Al-Buruj Juz 30-ல் உள்ளது.

சூரா Al-Buruj-ஐ எங்கு கேட்கலாம்?

அப்துர் ரஹ்மான் அஸ்-ஸுதைஸ், மிஷாரி அல்அஃபாசீ, மஹ்மூத் கலீல் அல்ஹுசரி, அப்துல் பாஸித் அப்துஸ் ஸமத், மாஹிர் அல்முஐக்லி, ஸஅத் அல்ஃகாமிதீ, அஹ்மத் அல்அஜ்மீ, அபூபக்ர் அஷ்-ஷாத்ரீ, ஹானீ அர்-ரிஃபாஈ, முஹம்மத் சித்தீக் அல்மின்ஷாவீ, அலீ அல்ஹுதைஃபீ, முஹம்மத் அய்யூப், அப்துல்லாஹ் பஸ்ஃபர், யாஸிர் அத்-தவ்ஸரீ, நாஸிர் அல்கத்தாமீ, ஸலாஹ் அல்புதைர், ஸஊத் அஷ்-ஷுரைம், அப்துல்லாஹ் அவ்வாத் அல்ஜுஹனீ, முஹம்மத் ஜிப்ரீல் ஓதியதை வசனம் வசனமாகக் கேட்க இந்தப் பக்கத்தில் இயக்கு என்பதை அழுத்துங்கள்.

This page is translated with machine assistance and may contain mistakes. The English and Arabic versions are our reference. About our sources