தொழுகையை முடித்தபின் ஓத வேண்டியவை
((أَسْتَغْفِرُ اللَّهَ (ثَلاَثَاً) اللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ، وَمِنْكَ السَّلاَمُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَالْإِكْرَامِ)).
(நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன். (மூன்று முறை) (அல்லாஹ்வே! நீயே அஸ்-ஸலாம் (குறைகளிலிருந்து தூயவன்); உன்னிடமிருந்தே சாந்தி வருகிறது; மகிமையும் கண்ணியமும் உடையவனே! நீ பாக்கியம் மிக்கவன்.) (அஸ்-ஸலாம்: எல்லாக் குறைகளிலிருந்தும் குற்றங்களிலிருந்தும் விடுபட்டவன்.))
((لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ [ثلاثاً]، اللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الجَدُّ)).
(அல்லாஹ்வைத் தவிர வணங்கத் தகுதியானவன் வேறு யாருமில்லை; அவன் தனித்தவன், அவனுக்கு இணை இல்லை; ஆட்சி அவனுக்கே உரியது; புகழும் அவனுக்கே உரியது; அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன். அல்லாஹ்வே! நீ கொடுத்ததைத் தடுப்பவர் எவருமில்லை; நீ தடுத்ததைக் கொடுப்பவரும் எவருமில்லை; செல்வமும் செல்வாக்கும் உடையவருக்கு உன்னிடம் அவை பயனளிக்காது; ஏனெனில் உன்னிடமிருந்தே செல்வமும் செல்வாக்கும் வருகின்றன.)
((لَا إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ. لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَلاَ نَعْبُدُ إِلاَّ إِيَّاهُ, لَهُ النِّعْمَةُ وَلَهُ الْفَضْلُ وَلَهُ الثَّنَاءُ الْحَسَنُ، لَا إِلَهَ إِلاَّ اللَّهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الكَافِرُونَ)).
(அல்லாஹ்வைத் தவிர வணங்கத் தகுதியானவன் வேறு யாருமில்லை; அவன் தனித்தவன், அவனுக்கு இணை இல்லை; ஆட்சி அவனுக்கே உரியது; புகழும் அவனுக்கே உரியது; அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன். அல்லாஹ்வைக் கொண்டே தவிர எந்த வல்லமையும் சக்தியும் இல்லை. அல்லாஹ்வைத் தவிர வணங்கத் தகுதியானவன் யாருமில்லை; அவனைத் தவிர வேறு எவரையும் நாங்கள் வணங்க மாட்டோம். அருளும் சிறப்பும் அழகிய புகழும் அவனுக்கே உரியன. அல்லாஹ்வைத் தவிர வணங்கத் தகுதியானவன் யாருமில்லை; நிராகரிப்பாளர்கள் வெறுத்தாலும் நாங்கள் அவனுக்கே மார்க்கத்தை உளத்தூய்மையுடன் அர்ப்பணிக்கிறோம்.)
((سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَاللَّهُ أَكْبَرُ (ثلاثاً وثلاثين) لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ)).
(அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; அல்லாஹ் மிகப் பெரியவன். (முப்பத்து மூன்று முறை) (அல்லாஹ்வைத் தவிர வணங்கத் தகுதியானவன் வேறு யாருமில்லை; அவன் தனித்தவன், அவனுக்கு இணை இல்லை; ஆட்சி அவனுக்கே உரியது; புகழும் அவனுக்கே உரியது; அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன்.))
بسم الله الرحمن الرحيم ﴿قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُواً أَحَدٌ﴾، بسم الله الرحمن الرحيم ﴿قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِن شَرِّ مَا خَلَقَ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ﴾،بسم الله الرحمن الرحيم ﴿قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَهِ النَّاسِ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ﴾ بَعْدَ كُلِّ صَلاَةٍ.
பின்வரும் மூன்று அத்தியாயங்களை லுஹ்ர், அஸ்ர், இஷா தொழுகைகளுக்குப் பின் ஒரு முறையும், ஃபஜ்ர், மஃக்ரிப் தொழுகைகளுக்குப் பின் மூன்று முறையும் ஓத வேண்டும். [ஸூரா அல்-இக்லாஸ் (112)] [ஸூரா அல்-ஃபலக் (113)] [ஸூரா அன்-நாஸ் (114)]
﴿اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَوَاتِ وَمَا فِي الأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَوَاتِ وَالأَرْضَ وَلاَ يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ﴾ عَقِبَ كلِّ صَلاَةٍ.
ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் ஆயத்துல் குர்ஸீ ஓதுவதும் சுன்னாவில் உள்ளதாகும். [ஸூரா அல்-பகரா, வசனம் 255]
((لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ)) عَشْرَ مَرّاتٍ بَعْدَ صَلاةِ الْمَغْرِبِ وَالصُّبْحِ.
(அல்லாஹ்வைத் தவிர வணங்கத் தகுதியானவன் வேறு யாருமில்லை; அவன் தனித்தவன், அவனுக்கு இணை இல்லை; ஆட்சி அவனுக்கே உரியது; புகழும் அவனுக்கே உரியது; அவனே உயிர்ப்பிக்கிறான், மரணிக்கச் செய்கிறான்; அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன். (மஃக்ரிப், ஃபஜ்ர் தொழுகைகளுக்குப் பின் பத்து முறை))
((اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْماً نافِعاً، وَرِزْقاً طَيِّباً، وَعَمَلاً مُتَقَبَّلاً)) بَعْدَ السّلامِ مِنْ صَلاَةِ الفَجْرِ.
(அல்லாஹ்வே! பயனுள்ள கல்வியையும், நல்ல வாழ்வாதாரத்தையும், ஏற்றுக்கொள்ளப்படும் செயல்களையும் உன்னிடம் கேட்கிறேன்.) (ஃபஜ்ர் தொழுகைக்கு ஸலாம் கூறிய பின் ஓத வேண்டும்)