குர்ஆனின் 100-வது சூரா

சூரா Al-'Adiyat

மக்கீ 11 வசனங்கள் Juz 30
Al-'Adiyat

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلْعَٰدِيَٰتِ ضَبْحًۭا ﴿١﴾

மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فَٱلْمُورِيَٰتِ قَدْحًۭا ﴿٢﴾

பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فَٱلْمُغِيرَٰتِ صُبْحًۭا ﴿٣﴾

பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فَأَثَرْنَ بِهِۦ نَقْعًۭا ﴿٤﴾

மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا ﴿٥﴾

அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

إِنَّ ٱلْإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌۭ ﴿٦﴾

நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌۭ ﴿٧﴾

அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ ﴿٨﴾

இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ ﴿٩﴾

அவன் அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ ﴿١٠﴾

மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍۢ لَّخَبِيرٌۢ ﴿١١﴾

நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

Al-'Adiyat வசனம் 1 / 11

அரபி வாசகம்: உஸ்மானி எழுத்து. ஆங்கில மொழிபெயர்ப்பு: Jan Turst Foundation. ஒலிப்பதிவு: everyayah.com.

சூரா Al-'Adiyat பற்றி

சூரா Al-'Adiyat (العاديات) குர்ஆனின் 100-வது சூரா. இதில் 11 வசனங்கள் உள்ளன; இது Juz 30-ல் உள்ளது. இது மக்கீ சூரா என வகைப்படுத்தப்படுகிறது; அதாவது நபியவர்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்வதற்கு (ஹிஜ்ரத்) முன்பாகவே பெரும்பாலும் அருளப்பட்டது.

இதன் பெயர் العاديات; அரபியில் இந்த சூரா இவ்வாறே அறியப்படுகிறது.

சூரா Al-'Adiyat பற்றிய கேள்விகள்

சூரா Al-'Adiyat-ல் எத்தனை வசனங்கள் உள்ளன?

சூரா Al-'Adiyat-ல் 11 வசனங்கள் உள்ளன.

சூரா Al-'Adiyat மக்கீயா, மதனீயா?

இது மக்கீ சூரா என வகைப்படுத்தப்படுகிறது.

சூரா Al-'Adiyat எந்த Juz-ல் உள்ளது?

சூரா Al-'Adiyat Juz 30-ல் உள்ளது.

சூரா Al-'Adiyat-ஐ எங்கு கேட்கலாம்?

அப்துர் ரஹ்மான் அஸ்-ஸுதைஸ், மிஷாரி அல்அஃபாசீ, மஹ்மூத் கலீல் அல்ஹுசரி, அப்துல் பாஸித் அப்துஸ் ஸமத், மாஹிர் அல்முஐக்லி, ஸஅத் அல்ஃகாமிதீ, அஹ்மத் அல்அஜ்மீ, அபூபக்ர் அஷ்-ஷாத்ரீ, ஹானீ அர்-ரிஃபாஈ, முஹம்மத் சித்தீக் அல்மின்ஷாவீ, அலீ அல்ஹுதைஃபீ, முஹம்மத் அய்யூப், அப்துல்லாஹ் பஸ்ஃபர், யாஸிர் அத்-தவ்ஸரீ, நாஸிர் அல்கத்தாமீ, ஸலாஹ் அல்புதைர், ஸஊத் அஷ்-ஷுரைம், அப்துல்லாஹ் அவ்வாத் அல்ஜுஹனீ, முஹம்மத் ஜிப்ரீல் ஓதியதை வசனம் வசனமாகக் கேட்க இந்தப் பக்கத்தில் இயக்கு என்பதை அழுத்துங்கள்.

This page is translated with machine assistance and may contain mistakes. The English and Arabic versions are our reference. About our sources